கடைசி நேரத்தில் கடுமையாக கஷ்டப்பட்ட மனோபாலா..! இப்படி ஒரு மரணம் யாருக்குமே வரக்கூடாது…?

0
manobala
manobala

தயாரிப்பாளரும் இயக்குனரும் நடிகருமான மனோபாலா 69 வயது ஆகிறது அவர் திடீரென உடல் நலக்குறைவால் காலமானார். நடிகர் மனோபால தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் குணசேத்திர நடிகராகவும் பல வேடங்களில் நடித்துள்ளார். இவர் இதுவரை 40 திரைப்படங்களை இயக்கியுள்ளார் அதேபோல் 16 தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.

மனோ பாலா சினிமாவில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்து மிரட்டி உள்ளார். தற்பொழுது அவருக்கு 69 வயதாகும் இந்த நிலையில் இவர் சதுரங்க வேட்டை ஆகிய திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். இவர் முதன் முதலாக  1994 ஆம் ஆண்டு  தாய் மாமன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

மனோபாலா சில நாட்களாகவே கடுமையான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வந்தார். இந்த நிலையில் இன்று இல்லத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டே இருக்கும் நிலையில் திடீரென மரணம் அடைந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே கல்லீரல் பிரச்சனை இருந்தது. கல்லீரல் பிரச்சனைக்காக  மருத்துவரிடம் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார் சிகிச்சை பெற்று வந்த மனோபாலாவை வீட்டில் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

இவருக்கு கல்லீரல் பிரச்சனையோடு கடந்த சில நாட்களாகவே கடுமையான நெஞ்சு வலியும் ஏற்பட்டுள்ளது இதனால் அவர் மூச்சு விட முடியாமல் திணறியுள்ளார். முக்கியமாக மூச்சு விட முடியாமல் அவர் கடுமையாக திணறி வந்ததாக கூறப்படுகிறது. மனோ பாலா அவர்களுக்கு ஜனவரி மாதம் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அப்படி இருக்கும் நிலையில் அவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலையில் கூட அவருக்கு அதிகமாக நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது அதனால்தான் மரணம் அடைந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் அவரின் மரணம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் மனோபாலா மிகவும் நல்ல பெயர் எடுத்து வந்தவர்.