வீட்டுக்கு வந்தது நடிகர் மனோபாலாவின் உடல்.. கதறி அழும் குடும்பம்

தமிழ் சினிமா உலகில் பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கியவர் மனோபாலா இவர் முதலில் இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தார் அதன் பிறகு 1994 ஆண்டு தாய் மாமன் என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அசத்தினார் இவருடைய நடிப்பு சிறப்பாக இருந்ததால்  அடுத்தடுத்து வாய்ப்புகளை அள்ளினார். தொடர்ந்து முக்கிய மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

அந்த வகையில் நட்புக்காக மின்சாரக் கண்ணா சமுத்திரம் ரமணா பிதாமகன் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திருப்பதி தலைநகரம் வாத்தியார் என தொடர்ந்து படங்களில் நடித்து மக்களை மகிழ்வித்தார். இதோடு மட்டும் தன்னை நிறுத்திக் கொள்ளாமல் வேஸ்ட் பேப்பர் என்ற youtube சேனல் ஒன்றை நடத்தி அதில் தனக்கு தெரிந்த நடிகர் நடிகைகளை பற்றி வெளிப்படையாக பேசினார்.

மேலும் புது படங்களை விமர்சனம் செய்தும் வந்தார் இப்படிப்பட்ட மனோபாலா கல்லீரல் பிரச்சனையின் காரணமாக அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் மருத்துவமனதைக்கு போனதை கேள்விப்பட்ட ரசிகர்கள் இவர் மீண்டு வர வேண்டும் என பிராத்தனை எல்லாம் செய்தனர்.

ஆனால் கல்லீரல் பிரச்சனையின் காரணமாக இன்று மரணமடைந்தார் இவருடைய மரணத்திற்கு திரை உலகைச் சேர்ந்த நட்சத்திரங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய வருகின்றனர் வர முடியாதவர்கள் சோசியல் மீடியா பக்கத்தில் படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மறைந்த காமெடி நடிகர் மனோபாலாவின் உடல் வீட்டிற்கு வந்துள்ளது அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த பலரும் கண் கலங்கி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

manobala
manobala
manobala
manobala

Leave a Comment