மனோபாலா இருக்கும் ஐஸ்பெட்டியை கட்டிப்பிடித்து கதறி அழுத நடிகர்.! கண்ணீரில் தத்தளித்த குடும்பம்…

சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வளம் வந்த மனோ பாலா திடீரென மரணம் அடைந்துள்ளார். இவரின் இறுதி சடங்குகள் மற்றும் இறுதி ஊர்வலம் சென்னையில் இன்று காலை நடைபெற இருக்கிறது.

தமிழ் சினிமாவில் அனைவரிடமும் மிகவும் நட்பாகவும் நெருக்கமாகவும் பழகக் கூடிய ஒரே மனிதர் மனோபாலா. இவரின் பிரிவை யாராலும் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாது நேற்று மனோபாலா உடல் நலக்குறைவால் காலமான செய்தியை கேட்டு சினிமா பிரபலங்கள் சோகத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். உதவும் மனப்பான்மையும் அனைவரிடமும் மிகவும் எளிமையாக பழகக்கூடிய குணம் கொண்டவர்.

இவரின் இழப்பு சினிமாவில் மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். தமிழில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் மனோபாலா. ரஜினியின் ஊர்க்காவலன் விஜயகாந்தின் என் புருஷன் எனக்கு மட்டும்தான் என பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்று வீடு திரும்பி வந்தார். இந்த நிலையில் இவருக்கு கல்லீரல் பிரச்சனை காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சமீபத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக அவரது வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில் நேற்று திடீரென காலமானார்.

மனோ பாலாவின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் பல சினிமா பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் மனோபாலாவுடன் நடித்த எம் எஸ் பாஸ்கர் நேரில் வந்து அஞ்சலி செலுத்த வந்துள்ளார் அப்பொழுது ஐஸ்பெட்டியில் இருந்த மனோபாலாவை பார்த்து கட்டிப்பிடித்து கதறி அழுதுள்ளார்.

பிறகு குடும்பத்தாரிடம் ஆறுதல் கூறியும் இருக்கிறார் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version