இரங்கல் தெரிவிக்கிறேன் என நினைத்து மனோபாலாவை இழிவு படுத்திய இளையராஜா.! திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..

ilaiyaraja
ilaiyaraja

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பல பன்முகத் திறமை கொண்டவராக வளம் வந்தவர் இயக்குனர் மனோபாலா. இவர் திடீரென உடல்நல குறைவால் காலமானார் இவரின் இழப்பு சினிமா பிரபலங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் இவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்தார்கள்.

அந்த வகையில் நேரில் சென்று விஜய் இரங்கல் தெரிவித்து வந்தார் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. அதுமட்டுமில்லாமல் எம் எஸ் பாஸ்கர் மனோபாலா இருக்கும் ஐஸ் பெட்டியை பிடித்து கதறி அழுதார். இப்படி சினிமா பிரபலங்களின் நெஞ்சத்தில் மனோபாலா நல்ல இடத்தை பிடித்துள்ளார். பலருக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்.

அப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் இசைஞானியாக திகழ்ந்து வரும் இளையராஜா பல ஆயிரம் கணக்கான பாடலுக்கு இசையமைத்துள்ளார். இன்றும் இளையராஜாவின் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். புகழின் உச்சத்திற்கே சென்ற இளையராஜா  சிலரின் நடவடிக்கையால் இளையராஜா பேசிய பேச்சு வெறுப்பையும் சம்பாதித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் மனோபாலாவின் மரணத்திற்கு பல நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து ஷேர் செய்து வந்தார்கள் அந்த வகையில் இளையராஜாவும் தன்னுடைய பங்கிற்கு இரங்கல் தெரிவித்து ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் இரங்கல் தெரிவித்த இளையராஜா எல்லா காலத்திலும் என்னை சந்தித்து வருபவர் மனோபாலா. வீட்டிலிருந்து கிளம்பிய உடன் கோடம்பாக்கம் மேம்பாலத்தை  என் கார் தாண்டும் நேரத்தில் அங்கு என்னை பார்க்க காத்திருக்கும் இயக்குனர்களில் மனோபாலாவும் ஒருவர் என இளையராஜா கூறியுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் மனோபாலா இறந்து விட்டார் அவருக்கு இரங்கல் தெரிவித்தால் போதும் அதை விட்டுவிட்டு நீங்கள் காரில் போவதை தான் பார்க்க நின்று கொண்டு இருந்தார் என்பதை இப்பொழுது கூற வேண்டுமா என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.