மனோ பாலாவின் மரணத்திற்கு காரணம் இதுதான்.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அவரது மகன்..!

இயக்குனரும் நடிகரும் தயாரிப்பாளருமான மனோபாலா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  திடீரென காலமானார். அவரது மறைவுக்கு ரஜினிகாந்த், பாரதிராஜா, கமல், விஜய் என பல  சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பல சினிமா பிரபலங்கள் ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம் என வருத்தத்துடன் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

பிள்ளை நிலா, சிறை பறவை, ரஜினி நடித்த ஊர்காவலன், விஜயகாந்த் நடித்த என் புருஷன் எனக்கு மட்டும்தான் என பல திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார் மனோபாலா. இவர் படத்தை மட்டும் இயக்காமல் 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் காமெடி நடிகனாகவும் குணசித்திர வேடத்திலும் நடித்து ரசிகர் மத்தில் மிகவும் புகழ்பெற்றவர்.

நடிகராகவும் இயக்குனராகவும் ஜொலித்துக் கொண்டிருந்த மனோபாலா சதுரங்க வேட்டை திரைப்படத்தை தயாரித்து தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். அப்படி இருக்கும் நிலையில் அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மனோபாலா கடைசியாக தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் தான் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

மனோ பாலாவின் மறைவிற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் இந்த நிலையில் அவருடைய மகன் ஹரிஷ் தன்னுடைய தந்தை மறைவு குறித்து விளக்கம் அளித்துள்ளார் அவர் அதில் பேசியதாவது அப்பா நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வந்தார் ஆனால் இரண்டு வாரமாக உடல் நல குறைவு ஏற்பட்டு சிகிச்சையும் பெற்று வந்தார்.

அப்படி இருக்கும் நிலையில் அவருக்கு பிசியோ சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது இந்த நிலையில் எதிர்பாராத விதமாக இன்று உயிரிழந்து விட்டார் அப்பாவின் இறுதி ஊர்வலம் நாளை காலை 10 மணிக்கு வளசரவாக்கத்தில் நடைபெறும் என பத்திரிக்கையாளருக்கு மனோ பாலாவின் மகன் கூறியுள்ளார்.

Leave a Comment