அஜித்தின் மெகா ஹிட் பட இயக்குனரை சினிமாவில் அறிமுகம் செய்தது மனோபாலா தான்.? பலருக்கும் தெரியாத தகவல்

0
manobala h vinoth
manobala h vinoth

நகைச்சுவை நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் நடிகர் மனோபாலா இவர் நேற்று சென்னையில் திடீரென காலமானார் இவரின் இழப்பு சினிமா பிரபலங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஏனென்றால் சமீப காலமாக சினிமா பிரபலங்கள் தொடர்ந்து அடுத்தடுத்து மறைந்து வருகிறார்கள் அதனால் பலரும் துக்கத்தில் இருக்கிறார்கள்.

மனோபாலா பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு சினிமாவில் அதிக ஆர்வம் உருவானது ,ஹாஸ்டலில் தங்கி படித்து வந்ததால் சினிமா பத்திரிக்கையை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார் அது மட்டும் இல்லாமல் சினிமா தொடர்பான கட்டுரைகளை அதிக ஆர்வம் கொடுத்து படிப்பார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் அவர்கள் எழுதிய கட்டுரையை தான் விரும்பி படிக்க ஆரம்பித்தார்.

பெங்களூரில் பியூசி படித்துக் கொண்டிருந்த மனோபாலா காலேஜ் அடிக்கடி கட்டடித்து விட்டு சினிமாவிற்கு போகும் வழக்கத்தை வைத்திருந்தார் இதை கண்டித்து அவருடைய பெற்றோர்கள் அடித்ததால் இரவோடு இரவாக உண்டியலை உடைத்து அதில் உள்ள காசை எடுத்துக் கொண்டு சென்னைக்கு ஓடி வந்து விட்டார் சினிமாவில் ஏதாவது ஒரு வகையில் பணியாற்ற வேண்டும் என நினைத்தார் அதன் பிரதிபலனாக இவருக்கு ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் இவர் ஓவியம் வரைந்ததை பார்த்த பல பிரபலங்கள் இவரை களை இயக்குனராக மாற்றினார்கள்.

பின்பு பாலச்சந்திரன் திரைப்படத்தில் உதவி கலை இயக்குனராக வேலை செய்து வந்தார் பின்பு இயக்குனராக மாற வேண்டும் என்ற ஆசையில் சின்ன சின்ன வேலைகளை சினிமாவில் செய்து வந்த மனோபாலா பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். கஜினி திரைப்படத்தின் கதையைக் கேட்ட மனோபாலா அந்த திரைப்படத்தை தயாரிக்க முன் வந்தார். அந்த சமயத்தில் பிதாமகன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் சூர்யாவிடம் கதையை சொல்ல முருகதாஸ் அனுப்பினார் எப்படியாவது கஜினி திரைப்படத்தை தயாரித்து விடலாம் என எண்ணிக்கொண்டிருந்த மனோபாலாவுக்கு ஏமாற்றம் தான் ஒரு காலகட்டத்தில் அவரால் அந்த திரைப்படத்தை தயாரிக்க முடியவில்லை.

அதனால் கஜினி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் மனோபாலா இன்று இளம் இயக்குனர்களில் முக்கிய இயக்குனராக பார்க்கப்படும் எச் வினோத் அவர்களை சினிமா உலகிற்கு அறிமுகம் செய்தது மனோபாலா தான் 2014 ஆம் ஆண்டு எச் வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை திரைப்படத்தை தயாரித்தவர் மனோபாலா.
தற்போது மனோபாலா வேஸ்ட் பேப்பர் என்ற youtube சேனலை நடத்தி வந்தார் பல சினிமா பிரபலங்களுடன் இந்த சேனல் மூலம் உரையாடி வந்தார் இந்த நிலையில் அவரின் இழப்பு சினிமா பிரபலங்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது இவருக்கு ரஜினி கமல் சத்யராஜ் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.