துணிவு படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்ட மஞ்சு வாரியர்..!

வித்தியாசமான படங்களை  கொடுத்து தொடர்ந்து ஓடிக்கொண்டு இருப்பவர் இயக்குனர் ஹச். வினோத். இவர் இதுவரை எடுத்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான். இவர் அஜித்துடன் கைகோர்த்து தொடர்ந்து படங்கள் பண்ணி வருகிறார் இதுவரை நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்களை எடுத்தார்.

இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றது அதனைத் தொடர்ந்து மீண்டும் அஜித்தை வைத்து ஒரு நிஜ சம்பவத்தை மையமாக வைத்து துணிவு என்னும் படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்தில் ஆக்சன், சென்டிமென்ட் கலந்த படமாக உருவாகி வருகிறது இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர்..

மற்றும் இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, அஜய், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.. இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும்  வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்ததாக படக்குழு டப்பிங் பணிகளை நோக்கி நகர்ந்து உள்ளது.

துணிவு படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது அதற்கு முன்பாக ரசிகர்களை கவர்ந்திழுக்க அடுத்தடுத்த ட்ரைலர், டீசர், முதல் சிங்கிள் ட்ராக் என அனைத்தும் வெளியாகும் என தெரிய வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் இந்த படத்தின் கதாநாயகி மலையாள நடிகை மஞ்சு வாரியர்.

தனது ட்விட்டர் பக்கத்தில் டப்பிங்  வேலை என பதிவிட்டுள்ளார் மேலும் நடிகர் அஜித் இருக்கும்  ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு அசத்தி இருக்கிறார். அதில் அஜித்தின் முகம் தெளிவாக தெரியவில்லை என்றாலும் அது நடிகர் அஜித் என்பது போல் சொல்லப்படுகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

Leave a Comment