துணிவு திரைப்படத்தில் அஜித் சார்கிட்ட இதை எதிர்பார்க்கலாம் எனக் கூறிய மஞ்சு வாரியர்.!

துணிவு திரைப்படம் குறித்து நடிகை மஞ்சு வாரியார் சமீபத்தில் பிரபல சேனலுக்கு பேட்டி அளித்துள்ள நிலையில் அது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது அதாவது நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற இரண்டு வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹெச். வினோத், நடிகர் அஜித்குமார், போனி கபூர் இவர்களுடைய கூட்டணியில் துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தினை H.வினோத் இயக்க போனி கபூர் தயாரிப்பில் நிரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவரை அடுத்து சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான ஜான் கொக்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, மஞ்சு வாரியர், மகாநதி சங்கர், பிக்பாஸ் பிரபலங்களான பாவனி, அமீர் ஆகியோர்களும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காங் நகரங்களில் நடைபெற்றது. மேலும் இந்த படத்தில் ஜிப்ரான் இசையமைத்துள்ள நிலையில் எடிட்டராக விஜய் வடிவேலுக்குட்டி பணிபுரிந்து இருக்கிறார். இதனை அடுத்து இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் ரிலீஸ் செய்வதற்கான உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியே உள்ளது.

மேலும் ஒட்டுமொத்தமாக வெளிநாட்டு உரிமையை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில் துணிவு திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் வெளியான டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்ற நிலையில் சில மணி நேரங்களிலேயே 54 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நடிகை மஞ்சு வாரியர் பிரபல தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். துணிவு திரைப்படத்தின் நடிகை மஞ்சுவாரியார் கண்மணி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். துணிவு திரைப்படத்தில் ரசிகர்கள் எந்த விஷயங்களை எதிர்பார்க்கலாம் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு பதில் அளித்த மஞ்சு வாரியர் அஜித் சார எப்படி பார்க்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டீர்களோ அப்படி எதிர்பார்க்கலாம் துணிவு திரைப்படத்தில் அஜித் சார் லுக் ரொம்ப நல்லா இருக்கு என்னோட ஃபேவரிட் லுக் இது. ட்ரெய்லர்லையே பார்த்திருப்பீங்க ரசிகர்களை ரொம்ப கவரும் மேனர்ல அஜித் சார் பிடிச்சிருக்காரு.‌ அஜித் சார் மற்றும் வினோத் சார் இருவரும் இணைந்து உருவாகியுங்கள். திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக இது அமையும் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

Leave a Comment