மணிவண்ணனின் மகன் மற்றும் மருமகளை பார்த்துள்ளீர்களா.! அதுவும் அவருக்கு இரண்டு குழந்தைகள் வேற.

0

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் மணிவண்ணன் இவர் நடிகர் மட்டுமல்லாமல் கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இதுவரை மணிவண்ணன் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழி திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

இவர் இயக்குனர் பாரதிராஜா அவர்களிடம் 1978ஆம் ஆண்டு அசிஸ்டண்ட் இயக்குனராக அறிமுகமானார் அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த கோபுரங்கள் சாய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். மேலும் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியாகிய சின்னத்தம்பி பெரியதம்பி, முதல் வசந்தம், நூறாவது நாள், ஜல்லிக்கட்டு போன்ற பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

manivanan
manivanan

கடைசியாக இவர் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு ராஜராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் தற்போது உள்ள அரசியலை அப்போதே தோலுரித்து காட்டியது. இதுவரை 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் அதில் 35 திரைப்படங்கள் ஹிட் திரைப்படங்கள் தான். 2013 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணமடைந்தார் இவர் திடீரென இறந்ததால் திரைப் பிரபலங்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

மணிவண்ணன் அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார் மகனின் பெயர் ரகுவண்ணன். இவர் அபி என்பவரை 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு தற்போது ஆத்விக் என்ற குழந்தை பிறந்தது அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு ஆதித்யன் என்ற குழந்தை பிறந்தது. தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் இந்த நிலையில் இவர்களின் புகைப்படம் சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

manivanan
manivanan

இதுவரை மணிவண்ணன் மகனை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள் அது மட்டுமில்லாமல் மணிவண்ணன் மகனின் மனைவியையும் பலரும் பார்த்திருக்க மாட்டார்கள் இந்த நிலையில் இவர்களின் குடும்ப புகைப்படம் வைரலாகி வருகிறது.

manivanan
manivanan