உ. பி இளம்பெண் பலாத்காரம் கொந்தளிக்கும் திரைப் பிரபலங்கள்.!! வைரலாகும் ட்வீட்.

0

manisha rape actors tweet viral: உத்தரப்பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் கடந்த 14ஆம் தேதி வயலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த கிராமத்தை சேர்ந்த 4 இளைஞர்களால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதோடு விட்டுவிடாமல் அவர்களைப் பற்றிய உண்மையை அந்தப் பெண் வெளியே கூற கூடாது என்பதற்காக அந்தப் பெண்ணின் நாக்கை அறுத்து உள்ளனர்.

மேலும் அந்த பெண்ணின் முதுகு தண்டுவடம், கழுத்து உள்ளிட்ட இடங்களை கொடூரமாக தாக்கி எலும்புகளை உடைத்துள்ளனர். ரத்தவெள்ளத்தில் கிடந்த அந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் பார்த்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதேசமயம் அந்த கொடும் செயலுக்கு காரணமாக இருந்த நான்கு இளைஞர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எனவே இந்த பிரச்சனை பெரிதாக ஆனதால் போலீசார் அந்தப் பெண்ணின் பெற்றோர்களிடம் உடலை உடனடியாக தகனம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளனர். அவர்கள் மறுத்ததால் போலீசாரே எடுத்துச்சென்று சுடுகாட்டில் வைத்து எரித்துள்ளனர்.

எனவே இதைக் கண்டித்து திரைப் பிரபலங்கள் தங்களது ட்விட்டர் பக்கங்களில் அந்தப் பெண்ணுக்காக ஜஸ்டிஸ் பார் மனிஷா என ஒரு ஹேஷ் டேக்கை  உருவாக்கி நியாயம் கேட்கின்றனர் . இதோ அந்த ட்வீட்.

tweet-1
tweet-1
tweet-2
tweet-2
tweet-3
tweet-3