காப்பி அடிப்பதில் இளம் இயக்குனரையே மிஞ்சிய மணிரத்தினம்.? அம்மாடியோ… இத்தனை படத்தை காப்பி அடித்துள்ளாரா.

தமிழ் சினிமாவில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம்.இவர் குறுகிய காலத்திலேயே முன்னணி மற்றும் சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்றார் இவர் 1983ம் ஆண்டு பல்லவி அனுபவல்லி என்ற கன்னட திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவுக்கு இயக்குனராகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் .

இதனைத் தொடர்ந்து அவர் பிற மொழிகளில் தனது கவனத்தை செலுத்தி வந்த நிலையில் 1985ஆம் ஆண்டு இதய கோவில் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திக் கொண்டார்.இதனை தொடர்ந்து அவர்  வித்தியாசமான கதை களம் உள்ள படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டார் .

அந்தவகையில் இவர் இயக்கிய படங்களான மௌனராகம் ,நாயகன், தளபதி ,திருடா திருடா,அலைபாயுதே, ராவணன், கடல், காதல் கண்மணி, செக்கச் சிவந்த வானம்போன்ற படங்களின் மூலம் தன்னை யாரென்று தமிழ் சினிமாவிற்கு காட்டினார் மணிரத்தினம்.இந்த நிலையில் மணிரத்தினம் அவர்கள் பல படங்களை காப்பி அடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் கமலஹாசனை வைத்து மிகப் பெரிய ஹிட் கொடுத்த நாயகன் படத்தை காட்பாதர் என்ற ஹாலிவுட் படத்திலிருந்து திருடப்பட்டதாக கூறப்படுகிறது.

அதுபோல நியூ வேர்ல்டு என்ற ஆங்கிலப் படத்தை காப்பி அடித்து தமிழில் செக்கச் சிவந்த வானம் என்ற பெயர் வைத்து எடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அலைபாயுதே படம் ஹாலிவுட் படமான பேர் ரூட் இன் த பார்க் படத்தின் கதையை காப்பி பிடித்துள்ளார் மணிரத்தனம். சினிமாவில் சமீபகாலமாக முன்னணி இயக்குனர்கள் மற்றும் இளம் இயக்குனர்கள் பலர் ஆங்கில படத்தை தேடி பிடித்து தமிழில் படமாக எடுத்து வருகின்றனர்.

Leave a Comment