மணிரத்தினத்தின் அடுத்த திரைப்படம்.! இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

0
maniratinam
maniratinam

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம் இவர் செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தை தொடர்ந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தை வைத்து அதிரடியாகத் தயாரிக்கும் திரைப்படம் வானம் கொட்டட்டும். இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபு நடிக்க இருக்கிறார் அவருடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டின், சாந்தனு சரத்குமார், ராதிகா சரத்குமார் என பல நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள்.

மணிரத்னம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை படைவீரன் படத்தை இயக்கிய தனசேகரன் தான் இயக்க இருக்கிறார், மேலும் தனசேகர் உடன் இணைந்து மணிரத்தினம் இந்த திரைப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். இந்த திரைப்படத்தை மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனமும் தயாரிக்க இருக்கிறது.

மேலும் வானம் கொட்டட்டும் திரைப்படத்திற்கு 96 படத்திற்கு இசை அமைத்த கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசை அமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வேறு ஒரு படத்தில் பிசியாக இருப்பதால் இந்த திரைப்படத்தில் இருந்து விலகி விட்டார், அதனால் இந்த திரைப்படத்தின் மூலம் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார், இவர் பல பாடல்களை பாடியுள்ளார் விசுவாசம் திரைப்படத்தில் கூட இவர் பாடிய கண்ணான கண்ணே பாடல் மிகவும் பிரபலமடைந்தது, இதன் படப்பிடிப்பு இன்றில் இருந்து தொடங்குகிறது இதன் அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளார்கள் படக்குழு..