ஷூட்டிங் ஸ்பாட்டில் மணிரத்தினம் மற்றும் அஜித் இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்.!

பொதுவாகவே தமிழ் திரையுலகில் ஒரு சில நடிகர்கள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டால் உடனே அவர்கள் நான் நிறைய திரைப்படங்களில் நடித்து அதிகம் ரசிகர் வட்டத்தை வைத்து இருக்கிறேன் என பந்தா காட்டுவார்கள் ஆனால் தமிழ் திரையுலகில் தற்போது வரை நிறைய திரைப்படங்களில் நடித்து ஹிட்டானாலும் இயல்பாக இருக்கும் நடிகர் என்றால் அது தல அஜித் தான்.

இவரது நடிப்பில் சமீபகாலமாக உருவாகி வரும் திரைப்படம் என்றால் அது வலிமை திரைப்படம் தான் இந்த வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இவரது பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது என படக்குழுவினர் ரசிகர்களுக்கு அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள் ஆனால் என்ன காரணங்கள் என்று தெரியாமல் திடீரென்று படக்குழுவினர்கள் பர்ஸ்ட் லுக்கை வெளியிட வில்லை இதனால் ரசிகர்கள் பலரும் அப்போழுது மிகவும் வருத்தத்தில் இருந்தார்கள்.

இதனை தொடர்ந்து வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில காட்சிகள் வெளிநாட்டிற்கு சென்று எடுக்க வேண்டும் ஆனால் கொரோனா தொற்று காரணமாக படக்குழுவினர்களால் வெளிநாட்டிற்கு செல்ல முடியவில்லை.

மேலும் தல அஜித்தின் அடுத்த திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என பல ரசிகர்களும் கேட்டு வருகிறார்கள் தல அஜித் தமிழ் சினிமாவில் பணியாற்றி வரும் ஒரு சில இயக்குனர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து விட்டார் என்றுதான் கூற வேண்டும் ஆனால் ரசிகர்கள் பலரும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வில்லை என வருத்தத்தில் இருக்கிறார்கள் ஆனால் மணிரத்னம் தயாரிப்பில் தல அஜித் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ajith6
ajith6

இந்நிலையில் தல அஜித் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவிக்கும் நிலையில் தல அஜித் மற்றும் மணிரத்னம் ஆகிய இருவரும் ஒன்றாக இணைந்து இருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த அஜித்தின் ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment