நாங்க எல்லாம் அப்பவே அப்படி தான்.! இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை உங்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினி யார் தெரியுமா.?

0

தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக்கில் கடந்த 5 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக பணியாற்றியவர், இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.

சென்னையில் பிறந்த இவர் நடன இயக்குனர் hussain என்பவரை காதலித்து வந்தார், ஆனால் இவர்கள் இரு வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள், திருமணத்திற்கு பிறகும் தனது தொகுப்பாளினி வேலையை தொடர்ந்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் மதுரையில் பட்டிமன்றம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார் இவரின் பேச்சு அனைவரையும் ரசிக்கவைத்தது.

இந்த நிலையில் மணிமேகலை தனது ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படம் ரசிகரிடம் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது அந்தப் புகைப்படத்தில் மணிமேகலை சிறு வயது குழந்தையாக இருக்கிறார் அதை வெளியிட்டு நான் அப்போதும் ஸ்டைலாக தான் இருப்பேன் மேட்சிங்கா பூவெல்லாம் வைப்போம், அப்பவே நாங்கலாம் அப்படி தான் என கூறியுள்ளார்.