விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் மணிமேகலை. மேலும் விஜய் டிவியில் மிகவும் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் வளர்ந்துள்ள இவர் தனது கணவர் உசைனுடன் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்து அதில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது.
இவர்களின் திருமணம் பல தடைகளை மீறி நடந்த நிலையில் எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறி அனைவருக்கும் காட்ட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்து வருகிறார்கள். மேலும் இவர்களை திருமணத்தைப் பற்றி பல தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது வரையிலும் இவர்களை பெற்றோர்கள் சேர்த்துக் கொள்ளவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் மணிமேகலை தொடர்ந்து சின்னத்திரையில் பிரபலமடைந்து வருகிறார். கிட்டத்தட்ட இவர் 12 வருடங்களாக சின்னத்திரையில் பணியாற்றி வருகிறார். மேலும் மணிமேகலை மற்றும் உசைன் இருவரும் இணைந்து கார்,பைக் ஆகியவற்றை தனது சொந்த உழைப்பால் வாங்கினார்கள்.

மேலும் மணிமேகலையின் பிறந்தநாளன்று உசைன் மணிமேகலைக்கு பரிசாக ஒரு நிலத்தை வாங்கி தந்தார். இந்நிலையில் எப்படியாவது வீடு கட்டிவிட வேண்டும் என்பதுதான் இவர்களின் கனவாக இருந்து வருகிறது. அதற்கான ஆரம்பமாக தற்பொழுது இவர்கள் வாங்கிய நிலத்தில் போர் அடிக்கின்றார்கள்.
இது குறித்த வீடியோவை மணிமேகலை யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். போர் அடித்து முடித்த உடன் வீடு கட்டுவதற்கான பணிகளை ஆரம்பிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ரசிகர்கள் மணிமேகலை மற்றும் உசைனுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.