நடிகர் ஜெயம் ரவிக்காக மணிரத்தினம் பார்த்த வேலை..! மத்த நடிகர், நடிகைகளுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்..

0
ponniyin-selvan
ponniyin-selvan

இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படத்தை 500 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ளார் இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளார் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது அதாவது நாளை கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்திற்கான பிரமோஷன் எல்லாம் சூப்பராக முடிந்துள்ளது ப்ரீ புக்கிங்கிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி உள்ளது. அதனால் முதல் நாளில் இந்த படம் வேற லெவலில் வசூல் வேட்டை அள்ளும் என கணக்கிடப்பட்டுள்ளது இப்படி இருக்க படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பலர் நாளை மணிரத்தினம் மற்றும் படக்குழுவுடன் உட்கார்ந்து படத்தை பார்க்க திட்டமிட்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தை முதல் நாள் பார்க்க ஜெயம் ரவி மற்றும் அவரது நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் ஆசைப்படுகின்றனர் இதனால் ஜெயம் ரவி இயக்குனர் மணிரத்தினம் தனக்காக ஒரு ஷோ டிக்கெட்டுகளை கேட்டிருக்கிறார்.

மணிரத்தினம் முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார் ஏனென்றால் தற்பொழுது ஜெயம் ரவிக்கு கொடுத்தால் மற்ற நடிகர்களும் அதே சலுகைகள் எதிர்பார்ப்பார்கள் என்று கூறி தட்டிக் கழித்து விட்டாராம் இருப்பினும் ஜெயம் ரவி வருத்தப்படக்கூடாது என்பதற்காக குரோம்பேட்டையில் உள்ள ஒரு திரையரங்கில் பாதி டிக்கெட்டுக்கு மேல் ஜெயம் ரவிக்காக வாங்கி கொடுத்துள்ளார்.

ஜெயம் ரவியும் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டுள்ளாராம். பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க மணிரத்தினம் போல ஜெயம் ரவியும் முதல் நாள் பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கிறார். அதே சமயம் தனது குடும்பத்தினரையும் நண்பர்கள் உறவினர்கள் என அனைவரையும் அழைத்து வர இருக்கிறார் என கூறப்படுகிறது.