பிரமாண்ட படத்தை எடுப்பதில் ராஜமௌலியை ஓரங்கட்டிய மணிரத்தினம்.? புகழ்ந்து தள்ளும் கோலிவுட் வாசிகள்.

தமிழ் திரைஉலகில் கமர்சியல் படங்களில் கொடுப்பதில் மணிரத்னத்தை அடிச்சிக்க ஆளே இல்லை அதுவும் அந்த திரைப்படத்தை எப்படி எடுத்தால் அந்த படம் லாபம் ஆகவும் அதே சமயம் மக்களை கவரும் என்பதை புரிந்து வைத்து அதற்கு ஏற்றார் போல் படங்களை கொடுக்க கூடியவர்.

தற்போது வரையிலும் சினிமா உலகில் முன்னணி ஜாம்பவான் இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்று சிறப்பாக பயணிக்கிறார் தற்போதைய காலகட்டத்தில் பழைய இயக்குனர்கள் இந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு படங்களை இயக்க முடியாமல் தவித்து வருகின்றனர் ஆனால் மணிரத்தினம் மட்டும் காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டார் தற்போது மிகப்பெரிய பிரம்மாண்ட படங்களை தயாரிக்கவும் ரெடியாகி விட்டார்.

மணிரத்தினம் கிளாசிக் படங்களை எடுப்பதில் வல்லவர் என்பது நாம் அறிந்த ஒன்று தான் அவரே தற்பொழுது பிரம்மாண்டமான திரைப்படங்களை எடுக்க ரெடியாகி உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே தாறுமாறாக எகிறியது அதுவும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை 450 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக எடுக்கிறார்.

இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யாராய், திரிஷா, கீர்த்தி சுரேஷ் போன்ற பல முன்னணி ஜாம்பவான்கள் நடிக்கின்றனர். அவர்களையெல்லாம் ஒன்றிணைத்து ஒரு படத்தை குறுகிய நாட்களில் எடுப்பது ஒன்றும் சாதாரண விஷயமல்ல.

தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி மிகப்பெரிய பட்ஜெட்டில் பாகுபலி சீரியஸ் எடுத்து இருந்தார் இந்த இரண்டு திரைப்படங்களையும் எடுக்க அவர் சுமார் 500 நாட்களுக்கு மேல் எடுத்துக்கொண்டார் இந்த திரைப்படத்தை சுமார் 400 கோடி பட்ஜெட்டில் எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவரைவிட அனுபவத்திலும் திறமையிலும் வயந்த மணிரத்தினம் 450 கோடி பட்ஜெட் படத்தை வெறும் 190 நாட்களில் எடுத்து அசத்தியுள்ளார் இதனால் கோலிவுட் வட்டாரத்தில் ராஜமௌலியை விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர் காரணம்.

மிகப்பெரிய பட்ஜெட் அதே சமயம் அதிக டாப் நடிகர்களை வைத்து பெரும்பகுதி 190 நாட்களில் ஒரு படத்தை எடுத்து முடித்து ஒன்றும் அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல ஆனால் அதை செய்து காட்டி அசத்தினார் மணிரத்தினம் பாகுபலி படத்தை இவரை வைத்து எடுத்து இருந்தால் பண விஷயத்திலும் பொருட் செலவிலும் நிறைய மிச்சப்படுத்தி இருக்கலாம்  என பலரும் விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.

மேலும் பாகுபலி படத்தை மணிரத்னம் கொடுத்திருந்தார் 190 அல்லது 150 நாட்களில் படத்தை எடுத்து வெற்றி கண்டு இருப்பார் எனவும் ஒரு பக்கம் பேசப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment