பொன்னியின் செல்வன் படத்திற்காக பழைய நடிகரை இழுத்துப் போட்ட மணிரத்தினம்.? இவர் சும்மாவே வில்லன் ரோலில் மிரட்டுவார் இப்ப சொல்லவா வேணும்.

சமீபகாலமாக சிறந்த இயக்குனர்கள் பலரும் பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை எடுக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஷங்கரை தொடர்ந்து மிகப் பெரிய பட்ஜெட் படத்தை இயக்கி வருவர் தான் முன்னணி இயக்குனர் மணிரத்தினம். இவர்  பொன்னியின் செல்வன்  படத்தின்  கதையை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டம் போட்டுள்ளார்.

முதல் பாகத்தின் சூட்டிங்கை தற்போது தொடங்கியுள்ளார் மணிரத்னம் இந்தப்படத்தின் கதைக்காக டாப் நடிகர்களை தேர்வு செய்து நடிக்க களம் இறக்கி உள்ளார் அந்த வகையில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, நயன்தாரா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், ஜெயராம் போன்ற பல்வேறு நடிகர், நடிகைகள் இந்த படத்தில் இணைந்து உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பார்க்க படுகிறது.

இவர்களை தொடர்ந்து குணச்சித்திர மற்றும் கெஸ்ட் ரோலில் நடிக்க டாப்  நடிகர்களை தேர்வு செய்துள்ளார் மணிரத்தினம் அந்தவகையில் 30 வருடங்களுக்குப் பிறகு ஒரு டாப் நடிகரை இழுத்து போட்டு உள்ளார்.

மலையாளம் தமிழ் ஆகிய மொழிகளில் வில்லன் ஹீரோவாக நடித்த நடிகர் பாபு ஆண்டனி தற்போது பொன்னின் செல்வன் படத்தில் இணைந்துள்ளார் இவர் இதற்கு முன்பாக தமிழில் அஜித்தின் அட்டகாசம்,  சிம்புவின் விண்ணை தாண்டி வருவாயா  போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மணிரத்னத்துடன் இணைந்து இவர் இதற்கு முன்பாக அஞ்சலி என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். மீண்டும்  30 வருடங்கள் கழித்து மணிரத்னம்  இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னின் செல்வன் படத்தில் இணைந்துள்ளது இந்த படத்திற்கான வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

babu antony
babu antony

எப்படியும் பொன்னியின் செல்வன் படத்தில் அவரது நடிப்பு உச்சத்தில் இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.

Leave a Comment