மாதவனை முதலில் நிராகரித்த மணிரத்தினம் – “அலைபாயுதே” படத்தில் நடித்தது எப்படி.?

0
manirathinam-
manirathinam-

சினிமா உலகில் ஒர இயக்குனர் உச்ச நட்சத்திரமாக இருப்பது ரொம்ப கஷ்டம் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தால் மட்டுமே அந்த இயக்குனரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள் இல்லையென்றால் தூக்கி வீசி விடுவார்கள். ஆனால் ஒரு இயக்குனர் 80காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் இயக்குனராக இருக்கிறார்.

அவர் தான் மணிரத்தினம் இவர் காலத்திற்கு ஏற்றவாறு சிறப்பான படங்களை கொடுப்பதுதான் இவரது ஸ்டைல் இதுவரை ரஜினி, கமல் போன்ற டாப் ஜாம்பவான்களை வைத்து நல்ல நல்ல ஹிட் படங்களை கொடுத்தவர் இப்போதும் இந்த காலகட்டத்திற்கு ஏற்றார் போல உண்மை மற்றும் நாவல் சம்பந்தப்பட்ட கதைகளை தேர்வு செய்து எடுத்து வருகிறார்.

அந்த வகையில் இப்போ எடுத்துள்ள பொன்னியின் செல்வன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படத்தை தொடர்ந்து அடுத்த சில மாதங்களிலேயே இதன் இரண்டாவது பாகமும் வெளிவர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பரான தகவல் வெளிவந்துள்ளது அதாவது மணிரத்தினம் அலைபாயுதே படத்தை எடுத்தார்.

இந்த படத்தில் மாதவன் உடன்  கைகோர்த்து ஷாலினி, விவேக், ஜெயசுதா, கார்த்திக் குமார், வேணு அரவிந்த், swarnamalya மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் 2000 ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே மணிரத்தினம் இருவர் என்னும் படத்தை எடுத்தார் இந்த படத்தின் ஆடிஷனுக்காக முதலில் மாதவன் சென்று இருக்கிறார்.

அதில் கலந்து கொண்டு தேர்வான அவரை மணிரத்தினம் உன் கண் ரொம்ப சின்னதாக இருக்கு.. இப்படம் வேண்டாம் நான் சொல்லும் போது வா என அனுப்பிவிட்டாராம் மாதவனுக்கும் இது ஆகுறதுக்கு இல்லை என கிளம்பிவிட்டார் பின்னர் சில வருடம் கழித்து மணிரத்தினம் அழைத்து மாதவன் நடித்த திரைப்படம் தான் அலைபாயுதே என்பது குறிப்பிடத்தக்கது.