எனக்கே தண்ணி காட்ட பாக்குறியா.? ஒரு பாட்டுக்கு ஒரு கோடி.. என்ன ஓகேவா.. பிரபல கம்பெனியை கதறவிட்ட மணிரத்தினம்.!

Mani Ratnam : தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனராக பார்க்கப்படுபவர் இயக்குனர் மணிரத்தினம் இவர் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தின் பொழுது நடந்த சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அலைபாயுதே திரைப்படம் ஏ ஆர் ரகுமான், மணிரத்தினம் காம்போவில் வெளியானது. தமிழ் சினிமாவில் பல்வேறு ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் மணிரத்தினம் அவர் இயக்கத்தில் காலம் கடந்து கொண்டாடப்படும் திரைப்படங்களில் அலைபாயுதே திரைப்படமும் ஒன்று.

இந்த திரைப்படம் கடந்த 2000 ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது மேலும் இந்த திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிகை ஷாலினி நடித்திருந்தார் மாதவன் இந்த திரைப்படத்தின் மூலம் தான் என்ட்ரி கொடுத்தார் இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஏ ஆர் ரகுமானின் இசைதான்.

அலைபாயுதே படத்தில் ஒவ்வொரு பாடலும் ரசிகர்களை ரசிக்க வைத்தது இன்று வரை ரசிகர்கள் பலர் அதனை ரிங்டோன் ஆக வைத்து சந்தோஷப்பட்டு வருகிறார்கள். அந்த அளவு அந்த படத்தில் உள்ள இசை மற்றும் பின்னணி இசை என அனைத்தும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் மாதவனின் என்ட்ரி சீனுக்கு ஏ ஆர் ரகுமான் போட்ட என்றென்றும் புன்னகை என்கின்ற தீம் பாடலை இதுவரை ரசிக்காத ஆள்களே கிடையாது.

ஆனால் இந்த தீம் பாடலுக்கு ஒரு ஸ்டோரி இருக்கிறது அதாவது மாதவனின் என்ட்ரி சீனுக்கு முதலில் பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் குழுவின் பாடலை பயன்படுத்த மணிரத்தினம் முடிவு செய்தார் ஆனால் இதற்கான உரிமையை கேட்டு வெளிநாட்டு மியூசிக் கம்பெனி ஒன்றை அணுகிய பொழுது அந்த பாடலை பயன்படுத்த வேண்டும் என்றால் ஒரு கோடி தர வேண்டும் என கூறினார்கள் அதனால் அதிர்ச்சி அடைந்த மணிரத்தினம் ஆள விடுங்கப்பா சாமி என ஓடி வந்தார்.

அந்தப் பாட்டு இல்லன்னா என்ன நம்ப தமிழ் பாட்டையே போட்டு ஹிட் கொடுப்போம் என முடிவு செய்து என்றென்றும் புன்னகை என்கின்ற மாஸ் பாடலை உருவாக்கி அதனை படத்தில் வைத்து வெற்றியும் கண்டார் அதனை தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகிய உயிரே படத்தில் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்திருந்தார் அந்தப் படத்தில் தைய தைய என்ற பாடலை இசையமைத்திருப்பார் ஏ ஆர் ரகுமான் இந்த பாடலை இன்சைடு மேன் என்கின்ற ஹாலிவுட் படத்தில் பயன்படுத்த அந்த மியூசிக் கம்பெனி நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது.

இந்த இசை வெளியீட்டு உரிமையை வாங்கிய நிறுவனம் இலவசமாக கொடுக்க முடிவு செய்தது ஆனால் இதனை அறிந்து கொண்ட மணிரத்தினம் இதுதான் சான்ஸ் உன்னை பழிக்கு பழி வாங்குவேன் என இந்த பாடலை பயன்படுத்த வேண்டும் என்றால் ஒரு கோடி தர வேண்டும் என டீல் பேசினார் அந்த வெளிநாட்டு நிறுவனத்திடம் அதற்க்கு அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டு ஒரு கோடி ரூபாய் பணத்தையும் கொடுத்தது அதனை வாங்கிக்கொண்டு தான் பயன்படுத்த அனுமதி தந்தார் மணிரத்தினம்.

தனக்கே விபூதி அடிக்க பார்த்த நிறுவனத்திடம் இருந்து டீல் பேசி ஒரு கோடி பணத்தையும் வாங்கி தான் ஒரு ஜீனியஸ் என நிரூபித்தார் மணிரத்தினம்.

Leave a Comment