அஜித் ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்துள்ளார் ஆனால் தோல்வி திரைப்படங்களை கொடுத்தாலும் அதிலிருந்து எப்படியாவது மீண்டு வரவேண்டும் என தொடர்ந்து நடித்து வந்தார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்கள் அவருக்குக் கைகொடுத்தது அந்த திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அந்தவகையில் 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகிய திரைப்படம் தான் மங்காத்தா.
மங்காத்தா திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து அர்ஜுன், ராய்லட்சுமி, திரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் மாபெரும் ஹிட்டடித்தது படத்தை தயாநிதி அழகிரி, விவேக் ரத்தினவேல் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தார்கள். வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகிய இந்த திரைப்படம் 100 கோடி வசூல் வேட்டை நடத்தியது.
இந்த திரைப்படத்தில் அஜித் வித்தியாசமான ஹீரோ வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்தார் படம் மாபெரும் வெற்றி அடித்ததால் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வந்துவிடாதா என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மங்காத்தா திரைப்படம் வெளியாகி ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் மீண்டும் இந்த திரைப்படம் திரைக்கு வந்தால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர் நோக்கி கொண்டே இருக்கிறார்கள்.
மேலும் மங்காத்தா திரை படத்தை எத்தனை முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பிநாளும் ரசிகர்கள் சலிக்காமல் பார்த்து வருகிறார்கள் மங்காத்தா திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் பொழுது ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் கொண்டு வந்து விடுவார்கள் ரசிகர்கள். படம் வெளியாகி ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் #yearsofMangatha என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவலை படத்தின் ஆடை வடிவமைப்பாளர் ட்விட் ஒன்றை செய்துள்ளார். மங்காத்தா திரைப்படத்தில் அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் மிகவும் பாப்புலர் அதேபோல் அதன் பிறகு அஜித் அணிந்திருந்த செயின் மிகவும் பிரபலம் அந்த செயின் குறித்த தகவலை தான் தற்போது ட்விட்டரில் படத்தின் ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் கூறியுள்ளார் படத்தில் ஹீரோவிற்கு டாலர் செயின் ஒன்று இருக்க வேண்டும் கிளைமாக்ஸ் காட்சியில் அந்த செயினை கழற்றி நெருப்பில் போட்டு விடுவார் அஜித்.
இது திரைப்படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக இருப்பதால் அந்த செயின் கை விலங்கு போன்று இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினார் ஆம் அதனால் ஒரு நாளைக்கு முன்பாக தான் அந்த கைவிலங்கு டாலர் செயின் இறுதியானது என டுவிட்டரில் கூறியுள்ளார்.
