மாநாடு திரைப்படத்தின் டீஸரை வெளியிடும் முன்னணி நட்சத்திரங்கள்!! வைரலாகும் புகைப்படம்..

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் பொங்கல் அன்று வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் ஈஸ்வரன்.

இத்திரைப்படம் குடும்பங்களை வெகுவாக கவர்ந்து தற்போது நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது சிம்பு இந்த படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

திரைப்படத்திற்காக விறுவிறப்பாக நடித்து வருகிறார் சிம்பு.

தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்ட சிம்பு தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களை வெகுவிரைவிலேயே முடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கிறார்.

அதுபோலதான் மாநாடு திரைப்படம் ரசிகர்களுக்கு மிக சிறந்த ஒரு படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவ்வப்போது புகைப்படம் வெளியாகி வந்த நிலையில் இன்று சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது.

படத்தின் டீசரை 4 பிரபலங்கள் வெளியிடவுள்ளனர். தெலுங்கு – ரவிதேஜா, மலையாளம் – பிரித்விராஜ், கன்னடம் – கிச்சா சுதீப், ஹிந்தி – அனுராக் கஷ்யப் போன்றோர் வெளியிட உள்ளனர்.

மாநாடு டீசர் இன்று பிற்பகல் 2 : 34 மணி அளவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

Exit mobile version