மாநாடு படத்திலிருந்து முதல் காட்சி வெளியானது இதோ வீடியோ.

நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் மாநாடு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. பல நாட்களாக மாநாடு திரைப்படம் இதோ தோடங்குகிறது என இழுபறியில் இருந்தது ஆனால் தற்போது படப்பிடிப்பு தொடங்கியதால் சிம்பு ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.

மேலும் மாநாடு படப்பிடிப்பு பூஜையில். எஸ் ஏ சந்திரசேகர் பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா, மனோஜ், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியவர்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்கள்.அதுமட்டுமில்லாமல் நேற்று நடைபெற்ற இந்த திரைப்படத்தின் பூஜையில் விழாவை சிறப்பிக்க இயக்குனர் சேரன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

பூஜை முடிந்ததும் இந்த திரைப்படத்திலிருந்து முதல் ஷாட் எடுக்கப்பட்டது. இதில் கிளாப் போர்டு அடித்து படத்தின் முதல் காட்சியை தொடங்கி வைத்தார் இயக்குனர் சேரன்.

இந்த நிலையில் தற்போது முதல் காட்சி இணையதளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment