‘ஜெய்லர்’ படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த மம்முட்டி? மறைமுகமாக கூறிய ரஜினிகாந்த்..

RAJINIKANTH
RAJINIKANTH

Jailer movie: நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் முதன்முறையாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தில் இதற்கு முன்பு வேறு ஒரு பிரபலம் நடிக்க இருந்திருப்பதாக கூறி புதிய தகவல் ஒன்றை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஜெயிலர் படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில் தற்பொழுது ப்ரோமோஷன் படிகளில் படக் குழு ஈடுபட இருக்கிறது. அந்த வகையில் முதற்பட்ட பணியாக நேற்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு பல தகவல்களை பகிர்ந்து இருந்தனர். இதனை அடுத்து இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில் மூன்று பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் பெற்றிருக்கிறது. இந்த படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

மேலும் குறிப்பாக வில்லன் கேரக்டரில் மலையாள நடிகர் விநாயகம் நடித்துள்ளார். ஆனால் அவர் நடித்துள்ள இந்த ரோலில் முதலில் பிரபல நடிகர் மம்முட்டி தான் அடிக்க இருந்தாராம் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக அவருக்கு பதில் விநாயகத்தை நடிக்க வைக்க பட குழு முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து நேற்று இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் மறைமுகமாக கூறியிருந்தார். இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களுக்கு ஏராளமான தகவல்களை கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தார் இது குறித்த தகவல்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.