மாமன்னன் படம் எப்படி இருக்கிறது.! முழு விமர்சனம் இதோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தற்போது மாமன்னன் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தினை மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் நிலையில் மேலும் வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் நிலையில் பலருடைய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று மாமன்னன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. எனவே இந்த படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த விமர்சனம் பார்க்கலாம். இந்தப் படத்தில் எல்லாரும் தனக்கு கீழ் தான் யாராயிருந்தாலும் அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கு சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்றும் அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கிடையே நடக்கும் போராட்டத்தை வைத்து மாமன்னன் படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சொல்லும் அளவிற்கு கதாபாத்திரம் இல்லை என்றாலும் தனக்கு கொடுத்த வேலையை சூப்பராக செய்துள்ளார். அதேபோல் படம் முழுவதும் வடிவேலு, பகத் பாசில் இவர்களுடைய கேரக்டர் கச்சிதமாக இருக்கிறது. உதயநிதி மாமன்னன் திரைப்படம் தான் தனது கடைசி படம் என கூறிய நிலையில் இதனை அடுத்து கமலஹாசன் அவர்களுடைய தயாரிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்திலும் நடிக்க இருக்கிறார்.

மாமன்னன் படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அதாவது படத்தில் வடிவேலு பகத்வாஸில் நடிப்பு சிறப்பு, ஏ ஆர் ரகுமானின் இசை நன்றாக இருக்கிறது, மேக்கிங் இயக்கம் சிறப்பு, இடைவெளிக்கு பிறகு காட்சிகள் நன்றாக இருக்கிறது என கூறியுள்ளார்கள்.

இதனை அடுத்து குறைகளாக உதயநிதியின் நடிப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம், படத்தின் நீலத்தை கொஞ்சம் உரைத்திருக்கலாம், எமோஷனல் காட்சிகள் சில இடங்களில் செட் ஆகவில்லை மொத்தத்தில் உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் மக்கள் மனதில் ஆட்சியை அமைக்கும் என கூறியுள்ளார்கள்.

Leave a Comment