“மாமன்னன்” எனக்கு கடைசி படம் கிடையாது.? உதயநிதி ஸ்டாலின் கையில் எத்தனை படம் இருக்கிறது தெரியுமா..

udhaya-nithi-stalin
udhaya-nithi-stalin

உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமானார் அதன்பின் நண்பேண்டா கண்ணேகலைமானே, சைக்கோ, கதிரேசனின் காதல், மனிதன், போன்ற பல்வேறு சிறப்பான படங்களில் நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார்.

சினிமாவில் ஒரு பக்கம் தொடர்ந்து பயணித்தாலும் மறுபக்கம் அவரது அப்பா உடன் இணைந்து அரசியலிலும் சூப்பராக வெற்றி கண்டு வருகிறார். இப்படி இருந்தாலும் நல்ல கதைகள் வந்தாலும் தொடர்ந்து நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் தான் நெஞ்சுக்கு நீதி.

இந்த படம் இந்தியில் ஆர்டிகள் 15 படத்தின் ரீமேக் ஆகும். நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலும் அள்ளி அசத்தியது. நெஞ்சுக்கு நீதி படத்தை தொடர்ந்து மாமன்னன் திரைப்படத்தில் நடிக்கிறார் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயின்னாகவும், வடிவேலு காமெடியனாகவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இந்த படத்தை ஒரு சமூக அக்கறை உள்ள ஒரு திரைப்படமாக மாரி செல்வராஜ் எடுத்து வருகிறார் உதயநிதிக்கு இது கடைசி படம் என பல தகவல்கள் வெளிவந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து பேசியுள்ளார் இப்போது நான் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறேன் அதை தொடர்ந்து என்னிடம் நான்கு திரைப்படங்கள் இருக்கின்றன.

சமூக அக்கறை உள்ள கதைகள் வரும் பட்சத்தில் அது சிறப்பாக இருந்தால் தேர்ந்தெடுத்து நடிப்பேன் என கூறியுள்ளார் அப்படி என்றால் உதயநிதி ஸ்டாலின் சினிமா – அரசியல் என விடாமல் பார்த்து வருவர் என தெரியவருகிறது.