வாளுடன் நடிகர் உதயநிதி ஸ்டாலின்,துப்பாக்கி உடன் வடிவேலு.! இணையத்தை கலக்கும் மாமன்னன் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

தமிழில் நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு பெயரையும்,புகழையும் தேடிக்கொண்ட இயக்குனர்களில் ஒருவர்தான் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் தான் மாமன்னன்.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் உதயநிதி,பகத் பாஸில்,வடிவேலு,கீர்த்தி சுரேஷ் போன்ற முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.அது மட்டுமல்லாமல் ரெட் ஜெயன்ட் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து வருகிறார் இந்த திரைப்படத்தின் கதை வித்தியாசமாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

நடிகர் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலு அவர்கள் நடித்து வருகிறார்கள் எங்களுக்கு அப்டேட் தெரிவித்தால் நல்லா இருக்கும் என்றும் கேட்டு வருகிறார்கள்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு சில காலமாக திரைப்படங்களில் நடிக்கவில்லை ஆனால் அவர் மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்து தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் இந்த மாமன்னன் திரைப்படத்திலும் நடிகர் உதயநிதியுடன் இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்பொழுது படக்குழு இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

ஆம் வடிவேலு கையில் துப்பாக்கி உடன் இருக்க அவர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் வாளுடன் இருக்கிறார் இந்த போஸ்டரை பார்க்கும் பொழுது வித்தியாசமான கதைகளம் கொண்ட திரைப்படமாகத் தான் இது அமையும் என ரசிகர்கள் பலரும் தற்பொழுது கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment