உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி படத்தை பார்க்க வந்த “மாமன்னன்” படக்குழு – யார் யார் வந்தாங்க தெரியுமா.?

அண்மைகாலமாக இளம் இயக்குனர்கள் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர் அந்த வகையில் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி வெற்றி கண்டவர் மாரிசெல்வராஜ் அவர் தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் இப்பொழுது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்னும் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் கைகோர்த்து கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் மிக பிரமாண்ட பொருட்செலவில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் இந்த படத்திற்கு முன்பாக அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தில் நடித்தார் அந்த படம் இன்று கோலாகலமாக திரையரங்கில் வெளியானது. நெஞ்சுக்கு நீதி திரைப்படம் ஹிந்தியில் வெளியான ஆர்டிகல் 15 படத்தின் ரீமேக் ஆகும்.

தமிழில் தற்பொழுது நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் வெளியாகி உள்ளது படம் வேற லெவலில் இருப்பதாக படத்தைப் பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் மாமன்னன் படக்குழு உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தைப் பார்த்துக் விட்டு வாழ்த்தி உள்ளது.

மேலும் உதயநிதி சினிமா பயணத்தில் இது ஒரு முக்கியமான படம் இந்த படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் என தெரிவித்தனர். நெஞ்சுக்கு நீதி படத்தை பார்க்க மாமன்னன் படத்தின் படக்குழு மாரிசெல்வராஜ், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் மற்றும் படத்தில் பணியாற்றும் முக்கிய பிரபலங்கள் பலர் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment