கல்லாப்பெட்டியை நிரப்பும் “மாமன்னன் திரைப்படம்”.! 3 வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

கர்ணன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் எடுத்த திரைப்படம் தான் மாமன்னன். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில், ரவீனா ரவி, கீதா கைலாசம் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் படம் 29 ஜூன் மாதம் வெளியானது.

இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகரித்து காணப்பட்ட நிலையில் படம் வெளிவந்து அதை பூர்த்தியும் செய்துள்ளது ஆம் படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும்படி இருந்தது மேலும் வடிவேலு, பகத் பாசிலின் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்கள் மற்றும் மக்கள் பேசி வருகின்றனர்.

இதனால் இந்த படத்தை பார்க்க அடுத்தடுத்து பொதுமக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் இந்த படத்தின் வசூலும் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. முதல் நாளில் ஏழு கோடி வசூலித்திருந்தது ஆனால் இரண்டாவது நாளில் திடீரென வசூல் குறைந்தது.

ஆம் நான்கு கோடி மட்டுமே வசூல் செய்திருந்த நிலையில் சனி, ஞாயிறுகளில் வசூல் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டது அதன்படி மாமன்னன் படத்தின் மூன்றாவது நாள்  6 கோடி வசூலித்துள்ளது.  இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால்..

ஆறு அல்லது ஏழு கோடி வரை இன்றும் வசூலிக்கும் என கூறப்படுகிறது இதனால் மாமன்னன் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது நிச்சயம் இந்த படம் 50 கோடி வசூல் செய்யும் என பலரும் கூறி வருகின்றனர். இதனால் மாமன்னன் படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகிறது.

Leave a Comment