வசூலில் பட்டையை கிளப்பும் உதயநிதியின் மாமன்னன் – 2 நாட்களில் மட்டுமே இத்தனை கோடியா.?

mamannan
mamannan

இளம் இயக்குனர்கள் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தை எடுத்து தன்னை திரை உலகில் வெளிகாட்டுக்கொண்டார் அதனைத் தொடர்ந்து இவர் எடுத்த கர்ணன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இவர் எடுக்கும் பெரும்பாலான படங்கள் சாதி பெருமை பற்றி பேசும் படம் அல்ல சமூகநீதியை காட்டும் படமாக இருக்கும் அதை வகையில் மூன்றாவதாக உதயநிதி உடன் கைகோர்த்து மாமன்னன் என்னும் படத்தை உருவாக்கி இருந்தார் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் கைகோர்த்து வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ்..

கீதா கைலாசம், ரவீனா ரவி, சுனில் ரெட்டி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தனர் படம் 29 ஜூன் 2023 ஆம் தேதி வெளியானது படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சங்களை கொடுத்து வண்ணமே இருந்தன.

இதனால் இந்த படத்தை பார்ப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது அதனால் வசூலும் அடித்து நொறுகிறது 35 கோடி பட்ஜெட்டில் உருவான மாமன்னன் திரைப்படம் உலக அளவில் முதல் நாளில் 10 கோடிக்கு மேல் வசூலித்த..

நிலையில் இரண்டாவது நாளையும் சேர்த்து மொத்தமாக 17 கோடி ரூபாய் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வருகின்ற நாட்களில் மாமான்ன படத்தில் வசூல் உச்சத்தை தொடும் என சொல்லப்படுகிறது. மேலும் நடிகர் உதயநிதியின் சினிமா கேரியில் மிகப்பெரிய ஓபனிங் படமாக மாமன்னன் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.