மீண்டும் விஜய் உடன் கைகோர்க்கும் மலையாள நடிகர்..? தளபதி 67 படத்தை தெறிக்க விட போகும் லோகேஷ் கனகராஜ்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சினிமாவில் என்ட்ரி ஆகி சில ஆண்டுகளிலேயே தென் இந்திய சினிமா உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக வலம் வருகிறார். இவர் தமிழில் மாநகரம் எனும் படத்தை இயக்கி அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரது கதை  சிறப்பாக இருந்ததால் அடுத்தடுத்து டாப் நடிகர்களுடன் கைகோர்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் கார்த்தி உடன் கைதி, விஜய் உடன் மாஸ்டர் போன்ற படங்களை கொடுத்து உலகநாயகன் கமலஹாசனுக்கே கதை கூறும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்தது. அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு கமலுக்கு ஒரு ஆக்ஷன் கதையை கூறி அவரை ஓகே செய்ய வைத்துள்ளார். அந்த வகையில் இவர்கள் கூட்டணியில் விக்ரம் என்னும் படம் உருவாகி வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இந்த படம் 400 கோடிக்கு மேல் வசூலை அள்ளி சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து அடுத்து லோகேஷ் விஜயுடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து அவரது 67-வது திரைப்படத்தை இயக்க உள்ளார். தளபதி விஜய் தற்போது வாரிசு எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் அடுத்து லோகேஷ் உடன் இணைவார் என தெரிய வருகிறது.

லோகேஷ் தற்போது தளபதி 67 படத்திற்கான கதையை தீவிரப்படுத்தி வருகிறார் மற்றும் படத்தின் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வருகிறார். இந்த நிலையில் லோகேஷ் அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும் நடிகர்களுக்கு நிகரான வெயிட்டான வில்லன்களை இறக்குவார். அதுபோல தளபதி 67 படத்திலும் ஒரு தரமான சம்பவம் செய்ய உள்ளார் லோகேஷ்.

ஆம் மலையாள நடிகர் மோகன்லால் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதற்கு முன் விஜய் மற்றும் மோகன்லால் இருவரும் இணைந்து ஜில்லா படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மோகன்லால் தளபதி 67 படத்தில் இணை உள்ளதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment