மாஸ்டர் ட்ரெய்லரை பார்த்துவிட்டு மெய் சிலிர்த்துப் போய் விமர்சனத்தை கூறிய பிரபலம்.!

master trailer
master trailer

Master trailer : தளபதி விஜய் பிகில் திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது என சமீபத்தில் தகவல் வெளியானது.

மேலும் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார், அதுமட்டுமில்லாமல் சாந்தனு பாக்யராஜ், சஞ்சீவ் கௌரி கிஷன், ஆண்ட்ரியா என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரசிகர்கள் தொலைக்காட்சிகளில் கண்டு களித்தார்கள்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிக்கும் மாளவிகா மோகனன் பிரபல இணையதளத்திற்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த பேட்டியில் டிரைலர் பற்றிய அனுபவத்தை அவர் கூறியுள்ளார்.   ரஜினி மற்றும் விஜய் போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த அனுபவத்தை கூறினார், அப்பொழுது பேட்ட படத்தில் ரஜினி சாருடன் அதிகநேரம் பேசுவதாக கூறி உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் விஜய் சாரோட சூட்டிங்கில் அதிகமாக பேசியுள்ளேன் எனவும்  மேலும் மாஸ்டர் டிரைலர் பற்றி அவர் பேசியதாவது சென்னையில் ஆடியோ வெளியீட்டு விழாவின்போது முதன்முதலில் மாஸ்டர் டிரைலரை நான் பார்த்தேன் பிறகு திரும்பிச் செல்லும்போதும் நான் அந்த ட்ரைலரைப் பார்த்தேன் இந்த ட்ரெய்லர் கண்டிப்பாக பார்ப்பவர்களுக்கு மெய்சிலிர்க்கும் படி இருக்கும் எனக் கூறியுள்ளார்.

மேலும் மாளவிகா மோகனன் கூறியதை வைத்து பார்த்தால் ட்ரைலர் செம்ம மாஸாக இருக்கும் என தெரிகிறது, இதனால்தான் விஜய் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு ரெடியாக இருக்கிறார்கள்.