ஓவர் பில்டப் கொடுத்துவிட்டு மாளாவிகாவை ஓரமாக உட்கார வைத்த மாஸ்டர் பட இயக்குனர்..! சரியான பல்பு தான் இது..!

0

malavika mohanan latest news:  தமிழகம் முழுவதும் நேற்று அனைத்து திரையரங்கிலும் தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்வாறு வெகுநாளாக இந்த திரைப் படத்தின் ரிலீஸுக்காக காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதம் தான்.

இந்த திரைப்படத்தில் தளபதி விஜயுடன் விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மகேந்திரன், அர்ஜுன் தாஸ், சாந்தனு, சஞ்சீவ், ஸ்ரீநாத், சீமான் போன்ற பல்வேறு பிரபலங்களும் நடித்துள்ளார்கள்.

பொதுவாக மெகா ஹிட் ஹீரோக்களின் திரைப்படத்தில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்காது அது மட்டுமில்லாமல் அவர்களுடைய கதாபாத்திரமும் சொல்லும்படி எழுதப்பட்டு இருக்காது இது அனைத்துமே பொதுவாக முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடப்பதுதான்.

அதுமட்டுமில்லாமல் திரையில் கதாநாயகியை காண்பிக்கும் நேரமும் மிக குறைவாக தான் இருக்கும் இப்படிப்பட்ட கொடுமை தான் நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் திரைப்படத்தில் அனுபவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மாளவிகா மோகனன் திறமை எந்த ஒரு காட்சியிலும் வெளி காட்டவே இல்லை.

மேலும் இந்த திரைப்படத்தில் பல முக்கிய பிரபலங்கள் நடித்தது காரணமாக மாளவிகா மோகனன் நடிப்பு சொல்லும்படி இல்லை அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன் விட ஆண்ட்ரியாவுக்கு கூட ஒரு படி மேலான கதாபாத்திரம் கொடுத்துள்ளதாகவும் சிலர் கூறி வருகிறார்கள்.

இதன் காரணமாகத்தான் நடிகை ஆண்ட்ரியா உந்துதலையும் மன உளைச்சலில் படத்தின் புரமோஷன் எதிலும் கலந்து கொள்ளவில்லையாம்.

malavika mohanan
malavika mohanan