தனுசுடன் எத்தனை முறை கட்டில் காட்சி.? இழிவாக கேள்வி கேட்ட ரசிகர்.! தரமான பதிலடி கொடுத்த மாளவிகா…

Actress Malavika Mohanan: சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகைகள் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தொடர்ந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றனர். அப்படி தற்பொழுது நடிகை மாளவிகா மோகனனிடம் ரசிகர் ஒருவர் விவாகரமான கேள்வி கேட்க கடுப்பான மாளவிகா பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான மாளவிகா இந்த படத்தினை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக மாறன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்பொழுது இவர் விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

தங்கலான் படத்தின் படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. விரைவில் இந்த படத்தின் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட இருக்கின்றனர். நடிகை மாளவிகா மோகனன் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அப்படி இவர் வெளியிடும் அனைத்து ஹாட் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே இவரை மில்லியன் கணக்கான ரசிகர்கள் பின்பற்றி வரும் நிலையில் இவருடைய புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாவது வழக்கம்.

இவ்வாறு நேரம் கிடைக்கும்போது எல்லாம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி தற்பொழுது ரசிகர் ஒருவர் தனுஷ் உடன் படுக்கையறை காட்சியில் நடித்த போட்டோவை வெளியிட்டு படுக்கை அறை காட்சிகளில் எத்தனை முறை நடிப்பீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளார்.

இவ்வாறு இந்த கேள்வியினால் கடுப்பான மாளவிகா உங்களது மண்டைக்குள் தான் அழுக்கு இருக்கிறது என பதிலடி கொடுத்து பதிவை வெளியிட்டுள்ளார். ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மாளவிகா மோகன் தொடர்ந்து தமிழ், மலையாளம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Leave a Comment