தனுசுக்கு பச்சைக்கொடி காட்டிய மாளவிகா மோகனன்.!! வாழ்றான்யா மனுஷன்…

0

actress malavika mohanan: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த பேட்ட என்னும் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இந்த திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு மனைவியாக நடித்து இருப்பார்.

இவ்வாறு அவர் நடித்த முதல் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படம் என்ற ஒரே காரணத்தினால் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைபடத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் இந்நிலையில் தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப் படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை மாளவிகா மோகனன் தற்போது தனுஷின் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே தனுஷ்  திரைப்படத்தில் மாளவிகாவை அணுகியபோது  அவர் ஏற்கனவே மூன்று திரைப்படங்களில் கமிட்டாகி இருந்த காரணத்தினால் அவரால் நடிக்க முடியவில்லை.

ஆனால் தற்போது அந்த மூன்று திரைப்படங்களுமே கொரோனா தாக்கத்தின் காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது எனவே மறுபடியும் தனுஷ் பட குழுவினர்கள் அவரை அணுகிய பொழுது  திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

இவ்வாறு வெளிவந்த தகவலானது சமூக வலைதளங்களில் மிகவும் பரவலாக பரவி வருகிறது அது மட்டுமில்லாமல் இந்தக் காரணத்துக்காகத்தான் தனுசுடன் நடிக்க ஒப்புக் கொண்டீர்கள் எனவும் பலரும் அவரை கேலி செய்து வருகிறார்கள்.