தளபதி விஜயை அப்பட்டமாக காப்பி அடித்த மாளவிகா மோகன்.! புகைப்படத்தை வைரலாக்கும் ரசிகர்கள்.!

தளபதி விஜய் பிகில் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, ஒரு திரைப்படத்தில் விஜய்யுடன் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி இடம்பெறும் சிறைச்சாலை காட்சிகள் மிகவும் மாஸாக இருக்கும் என சமீபத்தில் தகவல் வெளியானது, மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் வெளியான மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் வைரலானது, இந்தநிலையில் மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் போலவே அந்த திரைப்படத்தில் நடிக்கும் மாளவிகா மோகனன் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

மேலும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தைப் போல் புதிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகுமொ என சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

malavika mohan
malavika mohan

Leave a Comment