KGF படத்தில் நடித்த மாளவிகா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.? யாரை திருமணம் செய்துகொண்டார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் பணியாற்றி வந்த பல நடிகைகளும் தற்போது சினிமா பக்கமே வர முடியவில்லை அதற்கு முக்கிய காரணம் பல நடிகைகள் திருமணம் செய்து கொண்டு காணாமல் போய்விடுகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் அண்ணி டிவி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை மாளவிகா.

இந்த சீரியலை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.அந்த வகையில் பார்த்தால் இவர் நெகட்டீவ் ரோல் மற்றும் வழக்கறிஞர்,அரசியல்வாதி என பல திறமைகளைக் கொண்டு தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.

இவ்வாறு நடித்து வந்த இந்த நடிகைக்கு பட வாய்ப்பு குறைந்துவிடும் என்று பார்த்தால் கே.ஜி.எப் திரைப்படத்தில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கிடைத்துவிட்டது என்று தான் கூற வேண்டும் மேலும் கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தை பற்றி இவர் சமீபத்தில் பேசியுள்ளார். அதில் கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தில் எனக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் இருக்கும் என இயக்குனர் கூறியிருக்கிறார் இந்த திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை நான் சிறப்பாக நடித்துக் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இவரது திருமண வாழ்க்கையில் இவர் யாரை திருமணம் செய்து கொண்டார் என்பது பற்றி ரசிகர்களுக்கு இதுவரை தெரியாது அந்த வகையில் பார்த்தால் சந்திரமுகி திரைப்படத்தில் ராமச்சந்திரா ஆச்சாரியாக நடித்த நடிகர் அவினாஷ் தான் இவரைத் திருமணம் செய்து கொண்டாராம் இவர் கன்னடத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கி வரும் நடிகர் என்றும் பலருக்கும் தெரியாத ஒன்று.

கன்னடத்தில் இவர் வில்லன் கதாபாத்திரம் மற்றும் பல முக்கியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்கியுள்ளார் தற்போது இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவருக்கு இவர்தான் கணவரா எங்களுக்கு இத்தனை நாளா இது தெரியாம போச்சே என்று கூறி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version