தன்னுடைய 42வது பிறந்தநாளை முன்னிட்டு 18 வயதில் நடித்த முதல் திரைப் படத்தின் புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா.! அப்பவே அப்படியா

0

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மாளவிகா. இவர் முதன்முதலில் 1999 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளி ஆகிய உன்னை கொடு என்னை தருவேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  தான் அறிமுகமான முதல் திரைப் படம் அஜித்துடன் என்பதால் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது இதனைத் தொடர்ந்து அஜித்துடன் அடுத்த திரைப்படத்திலும் இணைந்தார்.

சொல்லப்போனால் அஜீத்துடன் குறுகிய காலத்தில் இரண்டு திரைப்படங்களில் நடித்த நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். இந்த நிலையில் இவர் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்து ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. அஜித் திரைப்படத்திற்கு பிறகு ரோஜாவனம் வெற்றிக்கொடிகட்டு கந்தா கடம்பா கதிர்வேலா பேரழகன் வசூல்ராஜா எம்பிபிஎஸ், சந்திரமுகி, வியாபாரி, நான் அவன் இல்லை, திருட்டு பயலே என பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தார்.

முதன் முதலில் படங்களில் நடித்து வந்த பொழுது குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார்.  அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு சி யூ அட் நைட் என்ற திரைப்படத்தில் நடித்தார்  அந்த திரைப்படம் தான் இவருக்கு சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்டது. இந்த திரைப்படத்திற்கு பிறகு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை.  அதன் பிறகு இவர் ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகையாகவும் ஐட்டம் டான்சராகவும் நடித்து வந்தார்.

அதன் பிறகு பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை. 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் திருமணத்திற்கு பிறகு 2009 ஆம் ஆண்டு ஆயுதம் செய்வோம் என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இன்று அவருடைய பிறந்த நாள் என்பதால் தான் நடித்த முதல் திரைப்படத்தின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களிடம் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

அந்த புகைப்படம் அஜித்துடன் நடித்த திரைப்படத்தின் புகைப்படம் என கூறப்படுகிறது.

malavika
malavika