நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இந்த நேரத்திலும் நடனமாடி அசத்தும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்.! வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.!

சினிமாவில் இருக்கும் நடிகைகள் சமீப கலமாக தாங்கள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதிலும் எந்த ஒரு பயமும் இல்லாமல் வீடியோ மற்றும் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இந்த நேரத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல மலையாள நடிகையும் சின்னத்திரை நடிகையுமான பியர்லெ மான்னே என்பவர் மலையாள பிக்பாஸில் கலந்து கொண்டவர்.இவர் பல மலையாள திரைப்படத்திலும் தெலுங்கில் ஒரு சில திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் தற்போது தமிழில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் இந்த நடிகை தற்பொழுது பேபி மாமா டான்ஸ் என்ற பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் எந்த ஒரு பதட்டமும் பயமும் இல்லாமல் அந்த பாடலுக்கு நடனமாடிய காட்சி பார்ப்பவர்களை ஈர்ப்பது மட்டுமல்லாமல் இந்த நேரத்தில் இதுபோல் நடனம் உங்களுக்கு தேவையா என அறிவுரை கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

இந்த வீடியோவுக்கு லைக்ஸ் மற்றும் ஷேர் குவிந்து வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment