விக்ரம் திரைப்படத்திலிருந்து லீக்கான வெறித்தனமான மேக்கிங் வீடியோ.!

நடிகர் கமல் நடிப்பில் வெளியாகவுள்ள விக்ரம் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது மேலும் இந்த திரைப்படம் வருகிற ஜூன் மாதம் மூன்றாம் தேதி வெளியாக உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் இந்த திரைப்படத்தின் பத்தல பத்தல என்ற பாடல் வெளியாகி சமீபத்தில் மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கியது.

அது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர் மத்தியில் அதிகரித்து கொண்டே வந்துள்ளது. இந்த திரைப்படம் குறித்த தகவல் அடிக்கடி வெளியாகி வருகின்றன நிலையில் தற்போது விக்ரம் திரைப்படத்திலிருந்து மேக்கிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் விக்ரம் திரைப்படத்திலிருந்து ஒரு சில தினங்களுக்கு முன்புதான் இரண்டாவது பாடல் வெளியானது இந்த பாடல் கேரளத்தில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் வீடியோ சமூக வலைத்தளத்தில் லீக் ஆகி இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment