அஜித்தை சினிமாவில் தூக்கிவிட்ட மங்காத்தா திரைப்படத்திற்கு சம்பளமாக எவ்வளவு வாங்கினார் தெரியுமா.! அட இவ்வளவுதானா உச்சி கொட்டும் ரசிகர்கள்..

வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாநிதி அழகிரி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில், கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி  வெளியாகிய திரைப்படம் தான் மங்காத்தா. இந்த திரைப்படத்தில் அஜித், அர்ஜுன், திரிஷா, லட்சுமி ராய், அஞ்சலி, ஆண்ட்ரியா, வைபவ் ராகவேந்திரா, பிரேம்ஜி அமரன், அஸ்வின் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.

மங்காத்தா திரைப்படத்தின் கதை 40 வயது நிரம்பிய அஜித் பணியிட நீக்கம் செய்யப்பட்டு இருப்பார் காவல்துறை அதிகாரியாக அர்ஜுன் கிரிக்கெட் சூதாட்ட கும்பலை வளைத்து பிடிக்க சிறப்பு புலனாய்வு அதிகாரியாக இருப்பார். கிரிக்கெட் சூதாட்டத்தின் மையமாக மும்பையும் அதன் முக்கிய புள்ளியாக ஜெய் பிரகாசம் இருக்கிறார்கள். அஜித் பணத்தை எப்படியாவது ஆட்டையை போட வேண்டும் என திரிஷாவை காதலிப்பது போல் நடிப்பார்.

ஐபிஎல் போட்டி நடைபெறும் பொழுது 500 கோடி பணமும் மொத்தமாக மும்பை வந்து பிரியப்போவது அர்ஜுன் தெரிந்து கொண்டு தன்னுடைய குழுவுடன் களமிறங்குகிறார் அதேபோல் ஜெயப்பிரகாஷிடம் வேலை செய்யும் மூன்று பேரும் சேர்ந்த அந்த பணத்தை பிரிக்க திட்டமிடுகிறார்கள் பணியில் நீக்கம் செய்த அஜித் அந்த கும்பலுடன் செய்கிறார். சேர்ந்து பணத்தை திருடுகிறார்கள் ஒரு பக்கம் அர்ஜுன் விரட்ட மறுப்பக்கம் ஜெயப்பிரகாஷ் விரட்ட அது போதாது என்று திருடிய ஐந்து பேரும் மாறி மாறி அடித்துக் கொள்கிறார்கள் கடைசியில் பணம் யாரிடம் போய் சேர்கிறது என்பதுதான்  கதை.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் அஜித் திரைப்படத்தில் மிக முக்கிய திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்தது. படம் வெளியாகி வசூலில் கல்லா கட்டியது. போட்ட பணத்தைவிட நல்ல வசூலை வாரி குவித்தது மேலும் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக அஜித் 10 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது என தகவல் கிடைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் அஜித் டபுள் டிஜிட்டல் சம்பளம் வாங்கிய முதல் திரைப்படம் என்ற திரைப்படத்தையும் மங்காத்தா திரைப்படம் பெற்றுள்ள இந்த தகவல் ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது. மங்காத்தா திரைப்படத்தின் பிஜிஎம் மியூசிக் இன்று வரை ரசிகர்களிடைய மிகவும் பிரபலம்..

Leave a Comment