சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் சர்ச்சையில் சிக்கிய முக்கிய காட்சி திடீர் மாற்றம்.! இணையத்தில் வெளியான அதிரடி புகைப்படம்.!

surya

சூர்யா நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளியாகும் பல திரைப்படங்கள் சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களாகதான் இருக்கிறது அந்த வகையில் இவரது நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியாகி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்த திரைப்படம் தான் ஜெய்பீம் tj ஞானவேல் இயக்கத்தில் உருவாகிய இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

மேலும் இந்த திரைப்படம் கடந்த 1995ஆம் ஆண்டு கடலூரில் நடந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த நபர்களுக்கு நடந்த கொடுமையை தான் இந்த திரைப்படத்தில் காட்டியிருப்பார்கள். அதேபோல் இந்த திரைப்படத்தில் நடித்த காவல்துறை அதிகாரி உண்மையாகவே ஒரு காவல்துறை அதிகாரி தான் ஆனால் சினிமாவிற்காக தனது காவல்துறை வேலையை விட்டுவிட்டு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் பல திரைப்படங்களை இயக்க வந்துவிட்டாராம்.

மேலும் இந்தத் திரைப்படம் வெளியான போது பல சர்ச்சைகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தாலும் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்ததாகவும் தகவல் வைரலாகி வருகிறது.இப்படி இருளர் சமுதாயத்தை சேர்ந்த நபர்களை எப்படி எல்லாம் அடித்து மிரட்டி இருக்கிறார்கள் என்பது இந்த திரைப்படத்தை பார்த்தாலே நமக்கு தெரியும் ஆனால் இது ஒரு உண்மை சம்பவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது ஆம் இந்த திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் தீச்சட்டி உடன் உள்ள அந்த நாளிதழை மாற்றியுள்ளனர்.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அது இப்போது சாமி படம் உள்ள காலண்டராக தெரிகிறது இந்த திரைப்படத்தில் நிறைய சூழ்ச்சிகளும் செய்துள்ளார்கள்.

என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் சூர்யா நடிக்கும் அடுத்த திரைப்படத்தை பற்றி நாங்கள் தெரிந்து கொள்வதற்காக மிகவும் ஆவலுடன் இருக்கிறோம் என  கூறுவதால் சூர்யாவின் அடுத்த திரைப்படம் இதே போல் தான் இருக்கும் என பலரும் கூறி வருகிறார்கள்.