பிரசாந்துடன் மஜ்னு திரைப்படத்தில் நடித்த நடிகையா இது.! வைரலாகும் குடும்ப புகைப்படம்

Majnu Rinke Khanna : கடந்த 2001 ஆம் ஆண்டு ரவிச்சந்திரன் இயக்கத்தில் முரளி மனோகர் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் மஜ்னு இந்த திரைப்படத்தில் பிரசாந்த், ரின்கி கண்ணா, ரகுவரன், சோனு சூட் விவேக் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்திருந்தார்.

படத்தின் பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது அது மட்டும் இல்லாமல் படமும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ரின்கி கண்ணா பாலிவுட் சினிமாவில் நடிகர் ராஜேஷ் கண்ணா மற்றும் பாலிவுட் நடிகையான டிம்பிள் கபாடியாவின் மகள்தான் ரின்கி கண்ணா இவர் சினிமாவில் 1999 ஆம் ஆண்டு நடிக்க ஆரம்பித்தார்.

பாலிவுட்டில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் பிறகு 2001 ஆம் ஆண்டு தான் மஜ்னு திரைப்படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மஜ்னு திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக தமிழில் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை , பொதுவாக சினிமா நடிகைகள் பெரிதாக பட வாய்ப்பு இல்லை என்றால் திருமணம் செய்து கொள்வார்கள் அதை தான் இவரும் செய்துள்ளார்.

ரின்கி கண்ணா தொழிலதிபர் சமீர் சரண் என்பவரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டில் ஆகிவிட்டார் இவருக்கு தற்பொழுது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் இவர்களின் குடும்பப் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Rinke Khanna
Rinke Khanna

இதோ புகைப்படம்.

Rinke Khanna
Rinke Khanna
Rinke Khanna
Rinke Khanna

Leave a Comment