அஜித் படத்தின் பாடலை பாடிய 25 வயது ஆன இளம் எம். எல். ஏ மைதிலி தாகூர்.?

அஜித் நடிப்பில் வெளியாகிய சூப்பர் ஹிட் பாடலான கண்ணான கண்ணே திரைப்படத்தின் பாடலை பிகரை சேர்ந்த இளம் எம்எல்ஏ பாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

அங்கு மிகவும் பிரபலமான நாட்டுப்புறப் பாடகியாக மைதிலி தாகூர் என்பவர் இருந்து வந்தார் 25 வயதான அவர் கடந்த மாதம் 14ஆம் தேதி பாஜகவில் இணைந்தார் அவருக்கு அலிநகர் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுத்தது.

தேர்தல் பரப்புரையை சிறப்பாக மைதிலி தாகூர் கையாண்டு இருந்தார் எனவே அவர் பிரபலம் என்பதால் மக்களை சென்றடைவதில் அவருக்கு சிரமம் ஏற்படவில்லை தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை விட 11,730 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவர் இதற்கு முன்பு சூப்பர் ஹிட் பாடல்களை தனது சொந்த குரலில் பாடி வெளியிட்டுள்ளார் அந்த வகையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய சூப்பர் ஹிட் திரைப்படமான விசுவாசம் திரைப்படத்தில் கண்ணான கண்ணே பாடலை பாடி வெளியிட்டிருந்தார்.

இதோ அவர் பாடிய பாடல்.