தன் மனைவியின் உருவத்தை கேலியும் கிண்டலும் செய்தவரை வச்சி செய்த மைனாவின் கணவர்.! குடும்பத்துடன் மன்னிப்பு கேட்ட சம்பவம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது 21 அவர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியில் மைனா நந்தினியும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட நிலையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் பிரபலமடைந்தார்.

அதன் பிறகு தொடர்ந்து தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த விருமன், சர்தார் மற்றும் விக்ரம் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில் தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது பங்கு பெற்ற வருகிறார். இந்நிகழ்ச்சியில் இவர் மணிகண்டா, மகேஸ்வரி, அமுதவாணன் போன்றவர்களுடன் இணைந்து விளையாடி வந்த நிலையில் மிகவும் பாதுகாப்பாக விளையாடுவதாகவும், பிக்பாஸ் தொகுப்பாளர் கமலஹாசன் அவர்களை அவமதித்து பேசுவதாகவும், டாஸ்க்களை நன்றாக விளையாடவில்லை எனவும் பல ரசிகர்கள் குற்றம் சாட்டி வந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் கேப்டன்சி டாஸ்கின் பொழுது டயரின் மூலம் அதிக நீரை சேகரிப்பவர்கள் வெற்றி பெறுவதாக அறிவித்திருந்தார்கள் இந்நிலையில் அந்த டாஸ்கில் ரட்சிதா, அமுதவாணன், மைனா நந்தினி கலந்து கொண்டனர் மேலும் அந்த டாஸ்க்கில் மைனா நந்தினி தான் வெற்றி அடைந்தார். இனால் இந்த வாரம் நாமினேஷனில் இருந்து மைனா நந்தினி காப்பாற்றப்பட்டார் இப்படிப்பட்ட நிலையில் மைனா நந்தினி வெற்றி பெற்றதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பகுப்பாய்வு செய்யும் பிரபல யூட்யூப் சேனல் ஒன்று டாஸ்கிருக்காக டயர் அணிந்து விளையாடிய மைனா நந்தினியை உருவாக்கி செய்யும் வகையில் பேசியிருந்தது.

எனவே உருவ கேள்வி செய்து பேசிய வீடியோ வைரலான நிலையில் சமீபத்தில் மைனாவின் கணவர் யோகேஸ்வரன் பிரபல செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பொழுது அதில் மைனா நந்தினி உருவக கேள்வி செய்த சேனலை கண்டித்து பேசினார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது நேற்று நடந்த டாஸ்க் மைனா நந்தினி டயர் அணிந்து விளையாடுவதை பல யூடியூப் சேனல்கள் விமர்சித்திருந்தனர்.

பிக்பாஸ் என்றாலே போட்டியாளர்களின் மீது விமர்சனங்கள் இருக்க தான் செய்யும் ஆனால் அதில் ஒரு குறிப்பிட்ட சேனல் மட்டுமே அந்தரங்க உறுப்பை கூறி கேலி செய்ததாக கூறினார். மேலும் அசிம், விக்ரமன் போன்றவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அவர்களுக்கு துணையாக மக்கள் இருக்கிறார்கள் ஆனால் மைனாவை  உருவ கேள்வி செய்தும் பொதுமக்கள் யாரும் அதனை தட்டி கேட்கவில்லை.

ஆனால் அதற்கு ஆதரித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் ஆனால் அந்த சேனல் பார்வையாளரின் விருப்பத்திற்காக இந்த வீடியோ என்று கூறிவிட்டு சென்றிருக்கலாம் ஏனென்றால் இப்படி பேசியது தவறு ஒரு வேலை அந்த இடத்தில் உங்களுடைய வீட்டில் ஒருவரை இப்படி சொல்லி இருந்தால் உங்களுக்கு எவ்வளவு மன வருத்தமாக இருக்கும் என்று கூறினார் இவ்வாறு பல தகவலை பகிர்ந்த நிலையில் மைனா நந்தினி கணவர் யோகேஸ்வரன் பேசிய வீடியோ வைரலான நிலையில் மைனா நந்தினியை உருவாக்கியது செய்த யூடியூப் சேனல் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது மேலும் இவ்வாறு இவர் தெரிவித்ததை பலரும் வரவேற்று வருகிறார்கள்.

Leave a Comment