மொழுமொழுன்னு இருந்த சீரியல் நடிகை நந்தினியா இது.! இவ்வளவு கொடூரமாக இருக்கிறாரே.! புகைப்படத்தை பார்த்து மிரளும் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.அந்த வகையில் ஒரு சில சீரியல்கள் மட்டும் முடிந்து சில வருடங்கள் ஆனபிறகும் கூட ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அந்த வகையில் ஒன்று தான் சரவணன் மீனாட்சி.

இந்த சீரியளுக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்ததால் 3 சீசன்கள் ஒளிபரப்பானது. அந்தவகையில் இரண்டாவது சீசனில் ரட்சிதா மஹாலக்ஷ்மி கதாநாயகியாகவும் இவருக்கு தோழியாக நந்தினியும் நடித்து வந்தார்.

இந்த சீரியலில் நந்தினி மைனா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த வகையில் தற்போது வரையிலும் மைனா என்று தான் பலர் இவரை அழைப்பார்கள். இந்நிலையில் இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார்.

அதோடு சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து சோசியல் மீடியாவில் தனது வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது மைனா தனது கணவருடன் இணைந்து வித்யாசமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த போட்டோவில் தனது கணவருடன் வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஏன் இப்படி போட்டோ ஷூட் நடத்தியுள்ளீர்கள். ஏதாவது புதிய சீரியல் அல்லது திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார் உள்ளீர்களா என்று பல கமெண்ட்களை செய்து குழப்பத்தில் இருந்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

 

Leave a Comment

Exit mobile version