Pre sales : முக்கிய இடத்தில் அதிக திரையரங்குகளை கைப்பற்றிய விஜயின் வாரிசு – பதுங்கிய துணிவு..

சினிமா உலகில் நம்பர் 1 இடத்தை பிடிக்க நடிகர்கள் ஆசைப்படுவது வழக்கம் அந்த வகையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் இடத்தை அடுத்து பிடிக்க அஜித், விஜய் தொடர்ந்து போட்டி கொண்டு வருகின்றனர். இருப்பின்னும் கடந்த எட்டு வருடங்களாக இருவரும் மோதிக்கொள்ளாமல்..

சோலோவாக படங்களை ரிலீஸ் செய்து வந்த நிலையில் எதிர்பாராத விதமாக அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு நடிகர் அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்கள் மோதுகின்றன. இந்த பொங்கல் ரேசில் யார் கை ஓங்கும் என்பதை ரசிகர்கள் தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டு வருகின்றனர்.

நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க பணத்தை மையமாக கொண்டு உருவாக்கி உள்ளது இதில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அவருடன் இணைந்து சமுத்திரக்கனி, மஞ்சு வாரியர், யோகி பாபு, ஜான் கொக்கன் மற்றும் பலர் நடித்துள்ளனர். விஜயின் வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இருப்பின்னும் இந்த படத்தில் ஆக்சன், காமெடி, மாஸ் காட்சிகள் அதிகம் இருக்கும் என சொல்லி வருகிறது. இந்த இரண்டு படமும் வெளிவர இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் இருந்தாலும் இரண்டு நடிகர்கள் படங்களும் அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் திரையரங்குகளை கைப்பற்ற அதிகம் மோதிக் கொண்டு வருகிறது.

இந்த நிலையில் UK வில் துணிவு மற்றும் வாரிசு படத்திற்கான பிரீமியர் வியாபாரம் சூப்பராக போய்க் கொண்டிருக்கிறது. இரண்டு படங்களும் எத்தனை லொகேஷன்களில் எத்தனை இடங்களில் புக் ஆகி உள்ளது. எவ்வளவு வசூல் நிலவரம் என்பது குறித்து தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது இதோ நீங்களே பாருங்கள்..