மஹிமா நம்பியாரின் திறமையை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.!

சாட்டை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மகிமா நம்பியார் சாட்டை படம் என்றாலே நடிகை மஹிமா நம்பியாரின் நடிப்பு தான் ஞாபகத்திற்கு வரும். இவ்வளவு சிறப்பாக பள்ளி மாணவியாக நடித்திருப்பார். அதன் பிறகு  குற்றம் 23, கொடிவீரன் மகாமுனி போன்ற பல படங்களில் தன் சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவின் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளித்திரை பிரபலங்கள் சின்ன திரை பிரபலங்கள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கி கொண்டனர். பொழுதுபோக்கிற்காக சிலர் விழிப்புணர்வு வீடியோவை பதிவிடுவது, நடனம் ஆடுவது பாடுவது, சமைப்பது உடற்பயிற்சிபயிற்சி செய்வது போன்ற வீடியோக்களை பதிவிட்டு கொண்டுள்ளனர்.

அந்த வகையில் மகிமா நம்பியார் தன் வீட்டின் சுவற்றில் ஓவியம் வரைந்து வருவதாக கூறி வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஓவியம் ஓவியர் அளவிற்கு இல்லை என்று அவர் கூறினாலும் ரசிகர்கள் பதில் சிறப்பாக உள்ளது என கூறுகின்றனர். வீட்டில் அடைந்து கொண்டிருப்பதாள் இவர்  ஓவிய திறமையை எடுத்தது வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இதற்கு தேவை செவுரு மற்றும் பென்சில் மற்றும் அம்மாவின் சம்மதமும் தான் என  அவர் கூறியுள்ளார்.

Leave a Comment