ராஜமவுலி மகேஷ் பாபு இணையும் திரைப்படத்தின் டைட்டில் இதோ.! அதிகாரபூர்வ அறிவிப்பு

varanasi-title
varanasi-title

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ராஜமௌலி இவர் இயக்கத்தில் வெளியாகிய பாகுபலி சீரியஸ் உலக அளவில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக யார் திரைப்படத்தை இயக்கப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆர் ஆர் ஆர் என்ற திரைப்படத்தை இயக்கி ஆஸ்கார் விருதுகளை வென்றார் அது மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபிஸில் பல ஆயிரம் கோடிகளை வசூலாக வாரிக் குவித்தது இந்த திரைப்படம்.

அதேபோல் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி யாரை வைத்து இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் மகேஷ் பாபுவை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கப் போகிறார் என தகவல் வெளியானது இந்த நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற 2027 ஆம் ஆண்டு திரைக்கு வரும் எனக் கூறப்பட்டது.

அதேபோல் இந்த திரைப்படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார் அவரின் போஸ்டர் வெளியாகி மாபெரும் வைரலானது அதுமட்டுமில்லாமல் பிருத்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

அவர் வில்லன் கதை பாத்திரத்தில் தான் நடிக்கிறார் என கூறப்படுகிறது. அப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் டைட்டிலை தற்பொழுது வெளியிட்டுள்ளார்கள் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக இதன் நிகழ்வு நடைபெற்றது அதன்படி இந்த திரைப்படத்திற்கு வாரணாசி என தலைப்பு இடப்பட்டுள்ளது

varanasi name
varanasi name