மகராசி சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி.! விலகிய முக்கிய பிரபலம்

0

தற்பொழுது உள்ள பல தொலைக்காட்சிகள் நல்ல தரமான கதை உள்ள பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் இந்த நாடகம் முன்னணி வகிக்கிறது என்பதை வாரம்தோறும் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம். எனவே தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு புதுமுக நடிகைகள் அறிமுகப்படுத்துவது ரசிகர்களுக்கு பிடித்த வகையில் பல சீரியல்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் ஒரு காலத்தில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்து வந்த நடிகைகளை வைத்தும் அந்து போன கதைகளையும் வைத்து பல சீரியல்களை இயக்கி வந்த சன் டிவி தற்பொழுது மற்ற தொலைக்காட்சிகளை விடவும் நல்ல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அதோடு டிஆர்பி-யிலும் தொடர்ந்து முன்னணி வகித்து வருகிறது சன் டிவி.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. எனவே சன் டிவி சீரியல்களின் படப்பிடிப்புகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. அதாவது சன் டிவியின் நிறுவனத்திற்கு உள்ளேயே செட் போடப்பட்டு சில நடிக,ர் நடிகைகளை மட்டும் வைத்து நாடகங்களை இயக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்த சீரியல்களில் ரசிகர்களின் பேவரைட் நடிகர், நடிகைகளும் ஒரு சிலர் வெளியேறி உள்ளார்கள். எனவே இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் மற்றொரு சீரியலில் சமீபத்தில் ஒரு நடிகை வெளியேறி விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது மகராசி சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பாரதி இந்த சீரியலில் இருந்து வெளியேறி உள்ளார்.

மகராசி சீரியலில் இவர் திவ்யா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வந்தார். ரசிகர்களின் பேவரைட் நடிகைகளில் இவரும் ஒருவர் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.